×

முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் விடுத்த கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. கடந்த இரு வாரமாக பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளால் தான் இது சாத்தியமானது.மே மாதம் மத்தியில் 35 ஆயிரம் பேர் நாளொன்றுக்கு பாதிக்கப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை 50 ஆயிரமாக உயரக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதை கவனத்தில் கொண்ட அரசு, உடனடியாக முழு ஊரடங்கு அமல் படுத்தியது. அதே நேரத்தில், மருத்துவமனைகளில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தபட்டதால்
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. கடந்த இரு வாரமாக பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளால் தான் இது சாத்தியமானது.மே மாதம் மத்தியில் 35 ஆயிரம் பேர் நாளொன்றுக்கு பாதிக்கப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை 50 ஆயிரமாக உயரக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதை கவனத்தில் கொண்ட அரசு, உடனடியாக முழு ஊரடங்கு அமல் படுத்தியது.

அதே நேரத்தில், மருத்துவமனைகளில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தபட்டதால் பாதிப்பு கட்டுக்குள் வந்தது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் பிற நோயாளிகள் சிகிச்சைக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புறநோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்துக் கிடக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், கொரோனா நோய் இல்லாத பிற நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தரவேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். நோயால் பாதிக்கப்பட்டு காத்திருப்போருக்கு சிகிச்சை தர ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.