நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடந்த நவராத்திரி விழாவில் பங்கேற்ற ஓபிஎஸ்
Oct 25, 2023, 13:25 IST
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடந்த நவராத்திரி விழாவில் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்றார்.
நவராத்திரி விழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திலும் பிரம்மாண்டமாக நேற்று நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டது.
லதா ரஜினிகாந்த் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகர், நடிகை மீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.