தமிழ் மொழி பேசும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுகூருவோம் - ஓபிஎஸ்
Nov 1, 2024, 13:20 IST
தமிழ் மொழி பேசும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுகூருவோம் என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து தமிழ்நாடு மொழிவாரியாக பிரிக்கப்பட்ட தினம் நவம்பர் 01. இந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தனி மாநிலமாக அமைய போராடிய தியாகிகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.