தினகரனுக்கு ஓபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து
Dec 13, 2023, 11:38 IST
அமமுக பொதுச்செயலாளர் தினகரனுக்கு ஓபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், எனது அன்புச் சகோதரருமான திரு. T.T.V. தினகரன் அவர்களின் 60-வது பிறந்த நாளினை முன்னிட்டு அவருக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நன்னாளில், அவர் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ்ந்து நாட்டுக்கு சேவையாற்றவும், அவருடைய குறிக்கோள் நிறைவேறவும், அவருடைய அரசியல் பயணம் சிறக்கவும் எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.