சமூகப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் பாக்கர் - ஓபிஎஸ் இரங்கல்
Jun 21, 2024, 11:08 IST
இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இஸ்லாமிய மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக துவங்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தை தொடங்கியவர்களில் ஒருவரும், இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தமிழ்நாடு மாநிலத் தலைவருமான திரு. எஸ்.எம். பாக்கர் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.