×

சபாநாயகர் அப்பாவு மீதான  நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆதரவு

 

சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வில், நேரமில்லா நேரத்தில், சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், சட்டப்பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க செங்கோட்டையன், ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பு எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எழுந்து ஆதரவு தெரிவித்த நிலையில் ஏற்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டியை அழைத்தார் அப்பாவு.  சபாநாயகர் அப்பாவு இருக்கையில் இருந்து அறைக்கு சென்ற நிலையில், துணை சபாநாயகர் பிச்சாண்டி அவையை வழிநடத்துகிறார்

சபாநாயகரை நீக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் முன்மொழிந்த தீர்மானம் வெற்றி பெற 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அவையில் திமுகவின் பலம் - 134, அதிமுகவின் பலம் - 66,  இந்தசூழலில் பாஜக, பாமக உறுப்பினர்கள் யாரும் பேரவையில் இல்லை என்பது குறிப்பிடதக்கது.