ஜே.சி.டி. பிரபாகரனின் மனைவி மறைவு - ஓபிஎஸ், சசிகலா இரங்கல்!
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகரனின் மனைவி உடல்நலக்குறைவால் மரணமடடைந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஜே.சி.டி. பிரபாகரனின் மனைவி கிரேஸ் ஜெயந்தி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு தலைவர்கள் பலறும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அன்பு சகோதரர் ஜே.சி.டி. பிரபாகரனின் மனைவி கிரேஸ் ஜெயந்தி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். மனைவியை இழந்து வாடும் அன்பு சகோதரர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.