☰
×

 பழைய ரூ. 2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள வாய்ப்பு

 

பழைய ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் 19 வெளியீட்டு அலுவலகங்களில் நேரில் சமர்ப்பித்து மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

2016 ஆம் ஆண்டு ஒருநாள் இரவு கருப்பு பணத்தை ஒழிப்பதாகக் கூறி ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து பொதுமக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் மோடி. பிறகு 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வெளியிட்டனர். இதனால் கருப்பு பணம் மேலும் அதிகரித்தது. பிறகு 2023 ஏப்ரல் 30 க்குள் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வேண்டும் என்று காலக்கெடு வைத்தனர்.  இப்போது 2000 ரூபாய் நோட்டுகளில் 5451 கோடி ரூபாய் திரும்ப வரவில்லை என்று கூறப்படுகிறது. 

அதன்படி பழைய ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் 19 வெளியீட்டு அலுவலகங்களில் நேரில் சமர்ப்பித்து மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 
புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் 98.47% திரும்பப் பெறப்பட்டுள்ளன. இருப்பினும், ரூ.5,451 கோடி மதிப்பிலான நோட்டுகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை. 
நேரில் செல்ல முடியாதவர்கள் தபால் மூலம் நோட்டுகளை அனுப்பலாம். அதற்கான தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தில் நேரில் அல்லது தபால் மூலம் நோட்டுகளைச் சமர்ப்பித்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.