×

#BREAKING ஒரு வாரத்திற்கு முன்பு காங்கிரஸில் சேர்ந்தவருக்கு வாய்ப்பு!

 

காங்கிரஸ் கட்சியில் ஒரு வாரத்திற்கு முன்பு சேர்ந்த ஜி.கே.எம். தமிழ்குமரனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் 28 சீட்டுகளை பெற்ற காங்கிரஸ் கட்சி, மனுத் தாக்கல் தொடங்கிவிட்ட நிலையிலும் வேட்பாளர் பட்டியலை இன்றுதான் ரிலீஸ் செய்தது. தேசிய கட்சி என்பதால் அகில இந்திய தலைமையின் ஒப்புதலுக்கு பிறகே பட்டியல் ரிலீஸ் ஆனாதால் இவ்வளவுதாமதம். பொதுவாக, காங்கிரசில் எப்போதுமே வேட்பாளர் தேர்வு இழுத்துக் கொண்டே இருப்பது வாடிக்கையானது தான் என்றாலும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தயாரித்த வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி நிராகரித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் ஒரு வாரத்திற்கு முன்பு சேர்ந்த ஜி.கே.எம். தமிழ்குமரனுக்கு போட்டியிட வாய்ப்பு. பென்னாகரம் தொகுதியில் போட்டியிட அவருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்துள்ளது. பாமக ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த ஜி.கே.மணி எம்எல்ஏ-வின் மகன் தான் தமிழ்குமரன். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ளார். காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில் 27க்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மதுரை மேலூருக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே காங்கிரசில் தொகுதி தேர்வும் வேட்பாளர் தேர்வும் விற்கப்படுகின்றன என்கிற ரீதியில் எம். பி. ஜோதிமணி சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில், அதை நிரூபிக்கும் வகையில், தமிழ் குமரன் சேர்க்கை விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளது.