மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
Dec 30, 2025, 20:37 IST
சபரிமலை மகர விளக்கு பூஜைக்காக ஸ்ரீ கோவில் நடை இன்று மாலை 5 மணி அளவில் திறக்கப்பட்டது. வரும் 14ம் தேதி மகர விளக்கு பூஜையும் மகர ஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது.
சபரிமலை மகர விளக்கு பூஜைக்காக ஸ்ரீ கோவில் நடை இன்று மாலை 5 மணி அளவில் திறக்கப்பட்டது. வரும் 14ம் தேதி மகர விளக்கு பூஜையும் மகர ஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. மகர விளக்கு பூஜைக்காகவும் ஜோதி தரிசனத்திற்காகவும் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவு வருவார்கள் என்ற காரணத்தினால் அதற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பக்தர்களுக்கான போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.