×

பள்ளிகள் திறப்பு - வெளியான புது அறிவிப்பு

 

தமிழகத்தில் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திட்டமிட்டப்படி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2 ல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் சரியாகவும், தரமானதாகவும் தாமதமின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்புகள் தவறாமல் நடத்தப்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.