×

அமித்ஷா அழைக்காதது வருத்தமே - ஓபிஎஸ்

 

சென்னை வந்த அமித்ஷா எங்களை அழைக்காதது உண்மையில் வருத்தமே என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “சென்னை வந்த அமித்ஷா எங்களை அழைக்காதது வருத்தமே! யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம்.  த.வெ.க தலைவர் விஜய் நல்ல இலக்கை நோக்கி செல்கிறார். ஈரோடு இடைத்தேர்தலில் தற்காலிகமாக தான் இரட்டை இலை சின்னம் பழனிசாமி அணியினருக்கு வழங்கப்பட்டது. தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம். மாவட்ட செயலாளர்கள் மற்றும் மக்களை சந்தித்து கருத்து கேட்ட பின்னர் வருங்காலங்களில் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும். விரைவில் மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தி கூட்டணி குறித்து அறிவிப்போம். மக்களவை தேர்தலின்போது ராமநாதபுரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க சூழ்ச்சி நடந்தது.  சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த மாதிரியான முடிவெடுக்க வேண்டும் என தொண்டர்களின் கருத்துக்களை கேட்டுள்ளோம்” எனக் கூறினார்.