×

தேச நலன் கருதி பாஜக போட்டியிட்டால் ஆதரவு- ஓபிஎஸ்

 

தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதில்  திமுக சார்பில் காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியில் களம் காண்கிறது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை தமாகாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய 2  அணிகளும் போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இதனையடுத்து இரு அணிகளும்  தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளை தனித்தனியே சந்தித்து ஆதரவு கோரி வருகின்றன.  


இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு தரக்கோரி ஜி.கே.வாசன் மற்றும் ஜான் பாண்டியனை ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு அளிக்கக்கோரி சென்னை கமலாலயத்தில் ஓபிஎஸ் தரப்பினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆலோசனை நடத்தினர். சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது.பாஜக தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரிக்க தயார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை, தேச நலன் கருதி பாஜக போட்டியிட்டால் ஆதரிக்க தயார்” என்றார்.