ஊட்டி போறீங்களா? அப்ப இந்த நியூஸ் உங்களுக்கு தான்..
மேட்டுப்பாளையம்-உதகை இடையேயான மலை ரயில் சேவை மேலும் 5 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், அக்டோபர் 23-ம் தேதி நள்ளிரவில் பெய்த கனமழையால், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. தண்டவாளத்தின் மீது பெரிய பாறைகள், மண் மற்றும் மரங்கள் விழுந்ததால், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. கடினமான மலை பாதையில், ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் சீரமைப்பு பணிகள் நிறைவு பெறவில்லை. இதனால், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் மற்றும் சிறப்பு மலை ரெயில் இன்று வரை ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம்-உதகை இடையேயான மலை ரயில் சேவை மேலும் 5 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகளை அகற்றி தண்டவாளத்தை சீா் செய்யும் பணி நிறைவடையாததால் நவம்பர் 14 முதல் 18 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.