×

அழைப்பிதழ் உள்ளோருக்கு மட்டுமே அனுமதி: தவெக..!!

 
த.வெ.க. சார்பில் இன்று மாமல்லபுரத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மாமல்லபுரத்தில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்கிறார். மாலை 6 மணிக்கு இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதை முன்னிட்டு அக்கட்சி தலைமை வெளியிட்ட அறிக்கையில், "அழைப்பிதழ் வழங்கப்பட்ட 1,000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். அழைப்பிதழ் இல்லாதோருக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி கிடையாது" என கூறப்பட்டுள்ளது.
தனித்து போட்டியிடுவது உறுதியாகி உள்ள நிலையில் முதல்கட்டமாக நடந்த நேர்காணலில் 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை விஜய் தேர்வு செய்து இருந்தார். நேற்று 2-வது கட்டமாக நேர்காணல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக முடிவை கட்சி தலைவர் விஜய் அறிவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
விஜய் போட்டியிடப்போவதாக கூறப்படும் பெரம்பூர் தொகுதி தேர்தல் பணிகளை நேரடியாக மேற்கொள்ள கொடுங்கையூரில், த.வெ.க. தேர்தல் அலுவலகத்தை அமைத்து வருகிறது. குளிர்சாதன வசதிகள் செய்யப்பட உள்ளது.