ஒரே ரீசார்ஜ்... 3 வருஷத்துக்கு நோ டென்ஷன்! ஜியோவின் அதிரடி ₹10,000 பிளான்!
ரிலையன்ஸ் ஜியோ, ரூ. 10,000 விலையில் மூன்று ஆண்டுகளுக்கான அன்லிமிட்டெட் கனெக்டிவிட்டி வசதி கொண்ட பிரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது.
இது ஒரு பிரீபெய்ட் திட்டமாகும், இதன் விலை 10,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் இதுவரை 10,000 ரூபாய் மதிப்பிலான திட்டத்தை அறிவித்ததில்லை.
அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விரும்பாத பயனர்களுக்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல கூடுதல் சலுகைகளும் அடங்கியுள்ளன. மேலும், பயனர்களுக்கு அன்லிமிட்டெட் 5ஜி வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் 10,000 ரூபாய் திட்டத்தில், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான வேலிடிட்டி ஆகியவை உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் மற்றும் ஹாலிவுட் சந்தா, 12 மாதங்களுக்கான கேன்வா ப்ரோ லைட், மற்றும் 50 ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜ் வசதி கொண்ட ஜியோ ஏஐ கிளவுட் (JioAICloud) ஆகிய கூடுதல் பலன்களும் இதில் அடங்கும்.
இந்த திட்டத்தில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் 5ஜி வசதியும் கிடைக்கிறது. இதன் மிக முக்கியமான நன்மை என்னவென்றால், பயனர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை.
திட்டத்தின் பலன்களும் விலையும் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றமின்றி அப்படியே இருக்கும்; எனவே, கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயனர்கள் பாதுகாக்கப்படுவர். அதே சமயம், இந்தத் திட்டம் பயனர்களை ஜியோவின் வாடிக்கையாளர்களாகவே தொடர்ந்து நீடிக்க செய்யும்.
இருப்பினும், மூன்று ஆண்டுகளுக்கான திட்டம் என்றாலும், 10,000 ரூபாயை ப்ரீபெய்ட் திட்டத்திற்காகச் செலவிடக்கூடியவர்கள் மிகச் சிலரே. போதுமான வருமானம் கொண்ட ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் மட்டுமே இத்திட்டத்தைத் தேர்ந்தெடுக்க முடியும். இந்தத் திட்டம் இன்று (நவ. 7) முதல் மைஜியோ செயலி, ஜியோ வலைதளம், சில்லறை விற்பனை நிலையங்கள், ஜியோ ஸ்டோர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற ஜியோ ரீசார்ஜ் தளங்கள் மூலம் கிடைக்கும்.