சபரிமலையில் நாள் ஒன்றுக்கு 80,000 பக்தர்கள் மட்டுமே தரிசிக்க அனுமதி- கேரள காவல்துறை
சபரிமலையில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 80,000 பக்தர்கள் மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என கேரள காவல்துறை அறிவித்துள்ளது.
சபரிமலையில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 80,000 பக்தர்கள் மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என கேரள காவல்துறை அறிவித்துள்ளது. பக்தர்கள் அனைவருக்கும் இணையவழி வரிசை முன்பதிவு கட்டாயம் என்றும், நிகழ்நேர உடனடி முன்பதிவு மையங்கள், நிலக்கலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி 10,000 பக்தர்களுக்கு உடனடி முன்பதிவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வனப் பாதைகள் வழியாக யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு செல்லுபடியாகும் ஆன்லைன் அல்லது உடனடி முன்பதிவு கட்டாயம். தனியார் வாகனங்களில் வருவோர் நிலக்கல் அடிவார முகாமில் நிறுத்திவிட்டு, பம்பையை அடைய KSRTC சேவையை பயன்படுத்துமாறு கேரள காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. நிலக்கலில் இருந்து பம்பை செல்லும் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 14 பயணிகள் வரை அமரக்கூடிய வாகனங்கள், பக்தர்களை இறக்கிவிட பம்பைக்கு செல்லலாம். பார்க்கிங்கிற்கு நிலக்கலுக்குத் திரும்ப வேண்டும். 14 பயணிகளுக்கு மேல் அமரக்கூடிய தனியார் வாகனங்கள் பம்பைக்கு செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் பம்பை நதியில் துணிகளை வீசக்கூடாது. பம்பை நதியின் தூய்மையைப் பராமரிப்பதிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் பக்தர்கள் ஒத்துழைப்பு அவசியம் என கேரள காவல்துறை கேட்டுள்ளது.