ஆன்லைன் மதுபான முன்பதிவில் குளறுபடி - மதுபிரியர்கள் அதிர்ச்சி!
ஆன்லைனில் பணம் செலுத்தியும், டாஸ்மாக் கடையில் அதற்கான வசதி இல்லை எனக் கூறி மதுபாட்டில் தர மறுப்பு தெரிவித்ததால் மதுப்பிரியர்கள் ஆவேசம் அடைந்தனர்.
அரக்கோணத்தில் மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்க ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். பணம் செலுத்தி மதுபானத்தை முன்பதிவு செய்துவிட்டு டாஸ்மாக் கடைக்கு மதுப்பிரியர்கள் சென்றுள்ளனர். ஆனால் ஆன்லைன் க்யூஆர் கோடு வசதி இன்னும் வரவில்லை என டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ள மதுப்பிரியர்கள், அரக்கோணத்தில் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாகவும், மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதற்கு, “நாங்கள் புகாரை பெற மட்டுமே முடியும், நடவடிக்கை எடுக்க முடியாது. மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் முறையீடுங்கள்” என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.