×

திருப்பதியை போன்று தமிழகத்திலும் ஆன்லைன் தரிசன டிக்கெட்- தொடரும் ரமேஷின் அதிரடி முடிவுகள்

 

திருப்பதியை போன்று தமிழகத்திலும் ஆன்லைன் தரிசன டிக்கெட்  கொண்டுவர தவெக அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் ஆன்லைன் மூலம்  தரிசன டிக்கெட் பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. முதற்கட்டமாக மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் சோதனை முறையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் திருத்தணி முருகன் கோயில் உட்பட 50 முக்கிய கோயில்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட இருக்கிறது இது தொடர்பாக அமைச்சர் ரமேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த திட்டத்தின் படி தரிசன டிக்கெட் எப்படி கொடுக்கப்படவிருக்கிறது என்பது தொடர்பாகவும் விரிவாக காணொலி காட்சியை வைத்து ஆணையர் விளக்கினார்.