#BREAKING 3-வது குழந்தைக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
Aug 18, 2026, 16:40 IST
அரசு ஊழியர்களின் மூன்றாவது குழந்தைகளுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என அமைச்சர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
அரசுப் பெண் பணியாளர்களின் மூன்றாவது குழந்தைக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 365 நாட்களாக உயர்த்தப்படுவதாக அமைச்சர் சரத்குமார் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதற்கு முன் 2 குழந்தைகளுக்கு மட்டுமே சம்பளத்துடன் கூடிய ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.