அஜிதாவை தொடர்ந்து திருவள்ளூர் தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி
தூத்துக்குடி தவெக நிர்வாகி அஜிதாவை தொடர்ந்து திருவள்ளூர் தவெக நிர்வாகி சத்திய நாராயணன் பினாயில் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அருகே கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனரில் பூண்டி ஒன்றிய தவெக ஒன்றிய செயலாளர் விஜய் பிரபு புகைப்படம் இடம்பெறாததால் பேனர் வைத்த நிர்வாகியை கண்டித்ததால் தவெக நிர்வாகி மனமுடைந்து கழிவறை சுத்தம் செய்யும் பினாயில் அருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் தவெக நிர்வாகி சத்திய நாராயணன். இவர் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தமிழர் திருநாள் பண்டிகை முன்னிட்டு தனது திருப்பாச்சூர் கிளை பகுதியில் வாழ்த்து கூறி பேனர் வைத்துள்ளார். அத்தகைய பேனரில் அதே பகுதியைச் சேர்ந்த தவெக ஒன்றிய செயலாளர் விஜய் பிரபு என்பவரின் புகைப்படம் இல்லாததால் அவர் சத்திய நாராயணனை தொடர்பு கொண்டு தன்னுடைய புகைப்படம் இல்லாமல் பேனர் வைப்பாயா? எனக் கூறி அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சாத்திய நாராயணன் தனது வீட்டில் கழிவறை சுத்தம் செய்ய வைத்திருந்த பினாயில் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். அவர் வீட்டார் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தவெக கும்மிடிப்பூண்டி வடக்கு மாவட்ட செயலாளர் விஜயகுமாரின் ஆதரவாளர்களுக்கு ஒன்றிய பதவி உள்ளிட்ட பொறுப்புகள் தெற்கு மாவட்டத்தில் அளிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி தவெக நிர்வாகி அஜிதா மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால்
தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், நிலையில் திருவள்ளூரில் பேனர் தகராறில் தவெக நிர்வாகி பினாயில் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தவெகவில் பதவிகள் பிடிப்பதில் திருவள்ளூர் மற்றும் திருச்சி ,தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உட்கட்சி பிரச்சினை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.