×

மேலும் ஒரு சோகம்..! குஜராத் விமான விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி!  

 

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதி, மெகானி என்ற பகுதியில் இயங்கி வந்துள்ளது. இந்தக் கட்டடத்தின் மீதுதான், ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. 

விமானம் விழுந்தபோது, கட்டடமும் தீப்பற்றி எரிந்ததாகவும், இதனால், அதில் இருந்த மருத்துவ மாணவர்களின் நிலை குறித்து கவலை ஏற்பட்ட நிலையில், முதற்கட்டமாக, விடுதியில் தங்கியிருந்த 5 மாணவர்கள் பலியானதாகக் கூறப்படுகிறது. அவர்களது அடையாளங்கள் தெரியவில்லை.

தற்போதைய நிலவரப்படி, குறைந்தது ஐந்து மருத்துவ மாணவர்கள், ஒரு முதுகலை மருத்துவர் மற்றும் அகமதாபாத்தில் உள்ள பி.ஜே மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஒரு சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரின் மனைவி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 60 க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் காயமடைந்துள்ளனர்" என்று தகவல் வெளியாகியுள்ளது.