×

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று 40 நிமிடம் ஏற்பட்ட மின்தடையால் ஆக்சிஜன் செலுத்துவது தடைப்பட்டு 2 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மருத்துவமனை அருகே மின்வயர் துண்டிக்கப்பட்டதால் மின்தடை நேர்ந்ததாக அம்மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார். மேலும், மின்தடை நேர்ந்தது உண்மை தான் என்றும் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழக்கவில்லை என்றும் மருத்துவமனை டீன் வள்ளி தெரிவித்தார். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை
 

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று 40 நிமிடம் ஏற்பட்ட மின்தடையால் ஆக்சிஜன் செலுத்துவது தடைப்பட்டு 2 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மருத்துவமனை அருகே மின்வயர் துண்டிக்கப்பட்டதால் மின்தடை நேர்ந்ததாக அம்மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார். மேலும், மின்தடை நேர்ந்தது உண்மை தான் என்றும் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழக்கவில்லை என்றும் மருத்துவமனை டீன் வள்ளி தெரிவித்தார்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மும்மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த அனுராதா என்பவரும் மின்தடையால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு அனுராதாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.