ஈரோடு ஆட்சியர் கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு..!!
Oct 22, 2026, 12:05 IST
ஈரோடு மாவட்டம் வெள்ளாளபாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சென்ற கார் மோதி சண்முகம் (50) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) தனது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்துவிட்டு ஸ்கூட்டரில் திரும்பியபோது, ஆட்சியரின் கார் வருவதைக் கவனிக்காமல் சாலையைக் கடந்ததால் இந்த விபத்து நேரிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.