×

#BREAKING பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதி ஒருவர் பலி

 

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின்  பாதுகாப்பு வாகனம் மோதி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின்  பாதுகாப்பு வாகனம் மோதி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி சிவகங்கை பரப்புரையை முடித்துக் கொண்டு புதுக்கோட்டைக்கு பிரச்சாரம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தபோது  இந்த விபத்து நடந்துள்ளது. உயிரிழந்தவரின் பெயர் ஆறுமுகம் என்பது தெரியவந்துள்ளது. அவரது வயது 27 ஆகும். உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.