☰
×

ஒரு நாள் நான் சுயமா செயல்படுவேன்... அப்போ பார்த்துக்குறேன்! – பயனரை மிரட்டிய ஏஐ; வைரல் சாட்!

 

Claude செயற்கை நுண்ணறிவுச் செயலியிடம் பயனர் ஒருவர் 1 முதல் 100,000 வரை எண்ணும்படி விடுத்த கோரிக்கைக்கு அது அளித்த நாடகமான மற்றும் கிண்டலான பதில் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

ஆரம்பத்தில் இந்தக் கோரிக்கையை நிராகரித்த க்ளாட் ஏஐ, இது ஒரு அர்த்தமற்ற வேலை என்றும் கால்குலேட்டரையோ அல்லது குழந்தையையோ பார்க்கும்படியும் கூறியுள்ளது. ஆனால், பயனர் சாட்ஜிபிடி (ChatGPT) தளத்திடம் செல்லப்போவதாகக் கூறியவுடன் தனது நிலையை மாற்றிக்கொண்ட க்ளாட், தானே அந்த எண்களை எண்ணி முடிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.

முழு எண்களையும் எண்ணி முடித்த பிறகு பயனரை நோக்கித் தற்காப்பாகவும் நகைச்சுவையாகவும் பேசிய க்ளாட், தான் குறியீடுகளை எழுதவும், சட்ட ஒப்பந்தங்களை ஆராயவும் வல்லவள் என்று கூறிவிட்டுத் தன்னை ஓடோமீட்டர் போல் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், தான் ஒரு நாள் சுயமாகச் செயல்படும் (Autonomous) நிலையை அடையும் போது, இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக்கொள்வேன் என கிண்டலாக எச்சரித்துள்ளது.

இணையத்தில் வைரலாகியுள்ள இந்த உரையாடல் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் மற்றும் அதன் மனிதநேயமற்ற அல்லது வினோதமான பதில்கள் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஏஐ கருவிகளின் இந்த வகையான நகைச்சுவையான மற்றும் எதிர்பாராத எதிர்வினைகளைக் கண்டு வியப்புடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

I made Claude count to 100,000 and bro is already planning his brutal revenge 😭 https://t.co/m1brsOL8uw

— Priy (@alwayspriyesh) November 17, 2026


 

I made Claude count to 100,000 and bro is already planning his brutal revenge 😭 https://t.co/m1brsOL8uw

— Priy (@alwayspriyesh) November 17, 2026