×

தடுப்பூசி போட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

 

வாணியம்பாடி அருகே தடுப்பூசி போட்ட குழந்தை உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஊசி தோப்பு பகுதியைச் சேர்ந்த  விக்னேஷ் குமார், கிருத்திகா தம்பதியினரின் ஒன்றரை வயது மகன் பூமீஸ். இவருக்கு இந்திரா நகர் பகுதியில்  உள்ள அங்கன்வாடியில் நேற்று நடந்த முகாமில் ஒன்றரை வயது குழந்தை பூமீஸ்க்கு தடுப்பூசி போடப்பட்டு பின்னர் வீட்டிற்க்கு அழைத்து சென்று வீட்டில் உறங்க வைத்த நிலையில், இன்று அதிகாலை எழுந்து பார்த்த போது குழந்தை மூச்சி இல்லாமல் இருந்ததை அறிந்து உடனடியாக குழந்தையை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பரிசோதித்த போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

குழந்தையின் பெற்றோர் குழந்தையை வீட்டிற்க்கு எடுத்துச் சென்றனர். தகவல் அறிந்து கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  வேலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி போடப்பட்டு குழந்தை இறந்ததை குறித்து வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவ சுப்ரமணியமிடம் கேட்டபோது, “தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தை இறப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு. இருப்பினும் மருத்துவ ஆய்வறிக்கை வந்த பின்னர் தான் உண்மையான காரணம் தெரிய வரும்” என்று கூறினார்.