×

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

 

வாணியம்பாடி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ளது கூவல்பட்டை கிராமம்.  அங்கு வசிக்கும் கட்டிட தொழிலாளியான விஜயகுமார்- ஆனந்தி தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை நிதிஷ். வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த நிதிஷ், விவசாய பயன்பாட்டிற்காக கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். விளையாடிக் கொண்டிருந்த குழந்தை நீண்ட நேரமாக காணாமல் போனதால், தாய் தேடியபோது தண்ணீர் தொட்டியில் நிதிஷ் கிடந்துள்ளார்.  தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.