மீண்டும்..மீண்டுமா..? முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்..!!
Nov 17, 2025, 11:25 IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் அஜித், அரவிந்த்சாமி, லிவிங்ஸ்டன், நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் முருகதாஸ், செஸ் வீரர் பிரக்ஞானந்தா ஆகியோர் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.