சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு!
Jun 22, 2024, 10:10 IST
சட்டமன்றத்தில் 2வது நாளாக இன்றும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
கேள்வி நேரத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரம் முடிந்த பிறகு, எந்த பிரச்னையை எழுப்பினாலும் அனுமதி தருகிறோம் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்கக் கோரி கேள்வி நேரத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், சபாநாயகர் அனுமதி அளிக்காததால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.