×

கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் கமல்ஹாசன்

 

கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் மக்கள் நீதி மய்ய  தலைவர் கமல் ஹாசன் பங்கேற்கிறார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 135 தொகுதிகளில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. அம்மாநில  முதல்வராக சித்தராமையாவும்,  துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் இன்று பதவி ஏற்கின்றனர். இன்று பிற்பகல் 12:30 மணிக்கு பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ,தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் , பீகார் முதல்வர் நிதிஷ்குமார்,  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் , சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்,  இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங்  ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.  இந்த சூழ்நிலையில் நடிகரும்,  மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன்,  கர்நாடக முதல்வர் பதவி ஏற்பு விழாவில் இன்று கலந்து கொள்கிறார்.  இதற்காக அவர் தற்போது பெங்களூர் சென்றுள்ளார்.