×

"ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்" 

 

இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு தவறு செய்யாமல் இயங்கி கொண்டிருந்த 120 ஆம்னி பேருந்துகளை அதிக கட்டணம் என்ற பெயரில் ஆணையரின் தவறான வழிகாட்டுதலின் படி சிறைபிடித்தும், மீண்டும் சிறைபிடிப்பதை நிறுத்த கோரியும் இன்று  மாலை 6 மணிமுதல்ஆம்னி பேருந்துகள் இயங்காது.  1 லட்சத்திற்கு மேலாக பயணிகள் இன்று பயணம் செய்ய முன்பதிவு செய்துதுள்ளார்கள் .

அவர்களை போக்குவரத்துதுறை சார்பாக வழியில் இறக்கிவிடுவதை தவிர்க்கும் பொருட்டு அனைத்து சங்கங்களும் இணைந்து வேறு வழியில்லாமல் இந்த முடிவை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கச் செயலாளர் மாறன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்; ஸ்ட்ரைக் அறிவித்த தென்மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்துக்கு 5% பேருந்துகளே உள்ளன;
ஆம்னி பேருந்துகளில் பயணிக்க 90% பேர் முன்பதிவு செய்துள்ளனர்"  என்றார்.