×

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் மீண்டும் ஓட தொடங்கின!

தமிழகத்தில் 6 மாதத்திற்கு பிறகு ஆம்னி பேருந்துகளின் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. 50% இருக்கைகளுடன் வழக்கமான கட்டணத்துடன் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறது. சுமார் 500 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் பயணிகளின் வருகையை பொறுத்து சேவையை அதிகரிக்க தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் பொதுப்போக்குவரத்து சேவைக்கு தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு தளர்வுகளால் மீண்டும் தமிழகத்தில் கடந்த மாதம் முதல் பேருந்து சேவை தொடங்கியது.
 

தமிழகத்தில் 6 மாதத்திற்கு பிறகு ஆம்னி பேருந்துகளின் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

50% இருக்கைகளுடன் வழக்கமான கட்டணத்துடன் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறது. சுமார் 500 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் பயணிகளின் வருகையை பொறுத்து சேவையை அதிகரிக்க தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் பொதுப்போக்குவரத்து சேவைக்கு தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு தளர்வுகளால் மீண்டும் தமிழகத்தில் கடந்த மாதம் முதல் பேருந்து சேவை தொடங்கியது. ஆனால் தனியார் பேருந்து சேவையை தொடங்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு இழப்பீடு, சாலை வரி ரத்து செய்தால் பேருந்துகளை இயக்க தயார் என்று அவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஆம்னி பேருந்து சேவை தொடங்கியுள்ளது.