×

வரும் 16 ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்!

பொதுமுடக்கத்திற்கு பின் போக்குவரத்தைப் பொறுத்தவரை இ.பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு வாகனங்கள் அனைத்திற்கும் வெளியூர் சென்று வர அனுமதி தரப்பட்டன பின்னர் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் தற்போது பேருந்துகள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இயங்கி வருகின்றன. ஆம்னி மற்றும் தனியார் பேருந்துகளும் 60 சதவீத பயணிகளுடன் இயக்க தமிழக அரசு அனுமதியளித்தது. ஆனால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்து பேருந்துகளை இயக்க முன்வரவில்லை. பேருந்துகள் ஓடாத மாதங்களில் கட்ட வேண்டிய
 

பொதுமுடக்கத்திற்கு பின் போக்குவரத்தைப் பொறுத்தவரை இ.பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு வாகனங்கள் அனைத்திற்கும் வெளியூர் சென்று வர அனுமதி தரப்பட்டன பின்னர் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் தற்போது பேருந்துகள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இயங்கி வருகின்றன. ஆம்னி மற்றும் தனியார் பேருந்துகளும் 60 சதவீத பயணிகளுடன் இயக்க தமிழக அரசு அனுமதியளித்தது. ஆனால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்து பேருந்துகளை இயக்க முன்வரவில்லை. பேருந்துகள் ஓடாத மாதங்களில் கட்ட வேண்டிய சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். இன்சூரன்சை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும், 100 சதவீதம் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வைத்தனர். ஆனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில் பண்டிகைகள் வருவதால் ஆம்னி பேருந்தை இயக்க திட்டமிட்டுள்ளனர். வரும் 16 ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், முதல் கட்டமாக தமிழகத்தில் மட்டும் 500 பேருந்திகளை இயக்க திட்டமிட்டப்பட்டிருப்பதாகவும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அன்பழகன் தெரிவித்துள்ளார். பயணிகள் வருகையை பொறுத்தே கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் அன்பழகன் தெரிவித்தார்.