ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை- ரூ.6,000 வரை வசூல் என மக்கள் வேதனை
Jan 18, 2026, 14:17 IST
பொங்கல் விடுமுறை முடிந்ததை அடுத்து சென்னை, பெங்களூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பும் நிலையில், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பொங்கல் விழா முடிந்து மக்கள் சென்னை திரும்பும் நேரத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வர ரூ.6,000 வரை வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.