×

சாலையோரம் நின்ற ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்து- 3 பயணிகள் பலி

 

சாலையோரம் நின்ற ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் மூன்று பயணிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டி நான்கு வழி சாலையில் தேநீர் அருந்துவதற்காக நின்றிருந்த சொகுசு பேருந்து மீது பின்னால் வந்த சொகுசு பேருந்து மோதிய விபத்தில் நிகழ்வு இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.15-க்கும் மேற்பட்டோர் சிறு சிறு காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து இரண்டு தனியார் சொகுசு பேருந்துகள் ஒன்று திருநெல்வேலிக்கும் மற்றொன்று மதுரைக்கும் வந்து கொண்டிருந்த நிலையில், கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி நான்கு வழிச்சாலையில் தேநீர் அருந்துவதற்காக சொகுசு பேருந்து ஒன்று பயணிகளுடன் நின்றிருந்தது. 

இந்நிலையில் பின்னால் வந்த சொகுசு பேருந்து எதிர்பாராத விதமாக நின்றிருந்த சொகுசு பேருந்து மீது மோதிய விபத்தில் செங்கல்பட்டை சேர்ந்த சுதர்சன், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கனகரத்தினம் மற்றும் திவ்யா என்ற மூன்று பயணிகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் அமர்ந்திருந்த 15க்கும் மேற்பட்டோர் சிறு சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.விபத்து குறித்து மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு சொகுசு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் உயர்ந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.