“புதிய ஆட்சியில் போக்குவரத்து துறையில் லஞ்சம் குறைந்துள்ளது”- ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனுடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் சந்தித்தனர். அப்போது சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனுடனான சந்திப்புக்கு பின் செய்தியாள்லர்களிடம் பேசிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன், “புதிய ஆட்சியில் போக்குவரத்து துறையில் லஞ்சம் குறைந்துள்ளதை தெளிவாக பார்க்கிறோம். கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும். சென்னைக்குள் இருந்து ஆம்னி பேருந்தில் பயணிக்க அனைவரும் கிளாம்பாக்கத்தை நோக்கி வாடகை காரில் பயணிக்கின்றனர். ஏராளமான வாடகை வாகனங்கள் கிளாம்பாக்கத்தை நோக்கி செல்வதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே கோயம்பேடு பேருந்து நிலையத்தை திறக்க வேண்டியும் போக்குவரத்து துறை சார்ந்து பல்வேறு பிரச்சனைகளை குறித்தும் அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் கோரிக்கை விடுத்தோம். வாகன பேன்சி எண்ணுக்கு விண்ணப்பிக்க இடைத்தரகருக்கு பணம் தரும் நிலை தவெக அரசில் இல்லை. புதிய ஆட்சியில் போக்குவரத்து துறையில் லஞ்சம் குறைந்துள்ளது” என்றார்.