நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி ஆகும் வரை சபாநாயகர் நாற்காலியில் அமர மாட்டேன் - ஓம் பிர்லா முடிவு..!!
காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், லோக்சபா செக்ரட்டரி ஜெனரல் உத்பல் குமார் சிங்கின் அலுவலகத்திற்கு சென்றனர்.
அங்கு, சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமென்று வலியுறுத்தி நோட்டீசை வழங்கினர். இதில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 118 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு இருக்கின்றனர்.
நம்பிக்கையில்லா நோட்டீஸை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு லோக்சபா செக்ரட்டரி ஜெனரல் இடம் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டுள்ளார். சபாநாயகரை நீக்கும் தீர்மானம் அடுத்த மாதம் மார்ச் 9ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முடிவுக்கு வரும் வரை லோக்சபா சபாநாயகர் நாற்காலியில் அமரப் போவதில்லை என ஓம் பிர்லா முடிவு செய்து உள்ளார்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் தரப்பட்டாலும் சபாநாயகர் தனது பணிகளை வழக்கம்போல் கவனிக்கலாம். அலுவலை கவனிக்க கூடாது என்று எந்த விதியும் கிடையாது. எனினும் தார்மீக அடிப்படையில், சபாநாயகர் ஓம் பிர்லா இந்த முடிவை எடுத்துள்ளார்.