×


சென்னையில் ஓலா, ஊபர் கால் டாக்சி கட்டணம் உயர்வு

 

சென்னையில் ஓலா, ஊபர் கால் டாக்சி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் தனியார் வாகனங்களை வணிக ரீதியாக இயக்க எதிர்ப்பு தெரிவித்து ஓலா, ஊபர்  ஊழியர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வாடகை வாகனங்களை முறைப்படுத்தும் வகையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்,  மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும், ஆட்டோக்களுக்கு மீட்டர் வழங்க வேண்டும் , பைக் டாக்ஸிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து  இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்  சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர்களின் போராட்டத்தால் ஓலா,  உபர் வாடகை கார்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  கோயம்பேடு- தாம்பரம் இடையே ஊபர் செயலி கார் வாடகைக்கு 1300 வரை வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . அத்துடன் ஓலா செயலியில் 600 வரை வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஓலா,  உபர் செயலி கட்டணங்களை அரசு முறைப்படுத்த வேண்டும்.  பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து,  வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.