×

தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்..!

 

சென்னையில் இயக்கப்படும் 625 மின்சார பேருந்துகளும் நாளொன்றுக்கு தலா 200 கி.மீ தூரம் இயக்கப்பட வேண்டும் என அசோக் லேலண்டின் OHM நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், அடிக்கடி ஏற்படும் பழுதுகளால் இந்த இலக்கை எட்ட முடியாததால், ஒப்பந்த விதிமுறைப்படி கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டு வரை OHM நிறுவனம் தமிழக அரசுக்கு ரூ.9 கோடியை அபராதமாக வழங்கியுள்ளது.

மின்சாரப் பேருந்துகள் நடுவழியில் பழுதாகி நின்றதாலும், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட தூரத்திற்கு பேருந்துகளை இயக்கத் தவறியதாலும், அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓம் (OHM) நிறுவனம், மாநகர போக்குவரத்து கழகத்திற்கு (MTC) ரூ.9 கோடி அபராதம் செலுத்தியுள்ளது.மாநகரப் போக்குவரத்து கழகத்தின் கீழ் இயக்கப்படும் இந்த மின்சார பேருந்துகளின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு ஒப்பந்தத்தை ஓம் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இருப்பினும், பேருந்துகள் தொடர்ந்து பழுதாகி பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.