☰
×

திருவாரூர் மாவட்டத்திற்கு அக்.22-ல் உள்ளூர் விடுமுறை..!!

 

முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு அக்.22-ல் உள்ளூர் விடுமுறை.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஷெய்கு தாவூத் ஆண்டவர் தர்காவின் கந்தூரி மற்றும் சந்தனக்கூடு வைபவமானது ஆண்டுதோறும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான பெரிய கந்தூரி திருவிழா நாளை தொடங்கி வருகிற வரும் 25ஆம் தேதி வரை 14 நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் வைபவம் நடைபெறும் நாளான வரும் 22ஆம் தேதி புதன்கிழமை அன்று, திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில், வரும் அக்டோபர் 24ஆம் தேதி சனிக்கிழமை அன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் வழக்கம்போல் முழு வேலை நாளாகச் செயல்படும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறையானது அவசரத் தேவைகளுக்கான அரசுப் பாதுகாப்புப் பணிகள் மற்றும் கருவூலத் கிளைகளுக்குப் பொருந்தாது எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்துவார்கள் என்பதால், அதற்கான சிறப்பான ஏற்பாடுகள் தர்கா நிர்வாகத்தின் சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் செய்யப்பட்டுள்ளன.