×

தமிழ்நாட்டில் மாற்றம் மலர்ந்து மக்களுக்கு வழி பிறக்கட்டும் - ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் வாழ்த்து

 

பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக தமிழக முன்னாள்ல் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழர் திருநாள், உழவர் திருநாள், அறுவடை திருநாள், இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாள் என பல பெயரிட்டு அழைக்கப்படும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். சாதி, மத வேறுபாடுகளை கடந்து, சமத்துவத்துடன், பொங்கும் மகிழ்ச்சியை உணர்த்தும் விதத்தில், புதுப்பானையில் புத்தரிசியிட்டு, பொங்கும்போது "பொங்கலோ பொங்கல்” எனக்கூறி பக்தியுடன் இறைவனை வணங்கிக் கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகை.