×

அகமதாபாத் தமிழ்ப்பள்ளி மீண்டும் செயல்பட பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்

கடந்த 1971ம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மணி நகரில் தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அந்த பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது கொரோனா மற்றும் மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி அப்பள்ளியை மூடுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில், “அகமதாபாத் தமிழ்ப்பள்ளி மூடப்படுமென்ற அறிவிப்பு எனக்கு மட்டுமல்ல, தமிழர்கள் அனைவருக்கும் வேதனையை
 

கடந்த 1971ம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மணி நகரில் தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அந்த பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது கொரோனா மற்றும் மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி அப்பள்ளியை மூடுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில், “அகமதாபாத் தமிழ்ப்பள்ளி மூடப்படுமென்ற அறிவிப்பு எனக்கு மட்டுமல்ல, தமிழர்கள் அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளி மீண்டும் செயல்பட மாண்புமிகு பாரதப் பிரதமர் @PMOIndia அவர்கள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி தமிழர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அன்னைத் தமிழ் மொழியையோ, தமிழர்களையோ மாண்புமிகு அம்மாவின் அரசு ஒருபோதும் கைவிடாது” என பதிவிட்டுள்ளார்.