அண்ணாவின் 115வது பிறந்த நாள் - ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை
Sep 15, 2023, 14:45 IST
அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். தனது ஆதரவாளர்களுடன் சென்று அண்ணா சிலைக்கு கீழே வைக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.