×

லாட்டரி முறையை சுயலாபத்திற்காக மீண்டும் கொண்டுவந்தது திமுகதான்- ஓ பன்னீர் செல்வம்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து பலரும் தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடைகோரி பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து நிரந்தர தீர்வு காணப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார். இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் சாமானியமக்களின் உழைப்பை சுரண்டிய லாட்டரிசீட்டு முறையை 2003ல் அதிரடியாக தடைசெய்து பாமரமக்களை காப்பாற்றியவர் மாண்புமிகு அம்மா அவர்கள்.
 

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து பலரும் தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடைகோரி பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து நிரந்தர தீர்வு காணப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.

இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் சாமானியமக்களின் உழைப்பை சுரண்டிய லாட்டரிசீட்டு முறையை 2003ல் அதிரடியாக தடைசெய்து பாமரமக்களை காப்பாற்றியவர் மாண்புமிகு அம்மா அவர்கள். அதன்பின் ஆட்சியில் அமர்ந்த திமுக தடைசெய்யப்பட்ட லாட்டரி முறையை சுயலாபத்திற்காக மீண்டும் கொண்டுவர எடுத்த முயற்சிகளை மக்கள் மறக்க மாட்டர்.

மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் தொடர்ந்து செயல்பட்டுவரும் அம்மாவின் அரசும், தற்போது இளைஞர்களின் வாழ்வை சீர்குலைக்கும் அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய முடிவெடுத்துள்ளது. என்றுமே தமிழக மக்கள் நலன் ஒன்றையே இலக்காக கொண்டு செயல்படும் ஒரே அரசு அம்மாவின் அரசு மட்டுமே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.