ஒடிசா பாலு மறைவு - ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்!
Oct 8, 2023, 11:30 IST
கடல்வழி ஆராய்ச்சியாளர் ஒடிசா பாலு மறைவிற்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலியல் சார்ந்த தமிழரின் வரலாறு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டவரும், பல நாகரிகங்களில் தமிழர்களுடைய ஊடுருவல் இருக்கிறது என்பதை எடுத்துரைத்தவரும், ஒடிசாவின் கலாச்சாரத்தை தீர ஆராய்ச்சி செய்ததன் விளைவாக ‘ஒடிசா பாலு’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான திரு. சிவஞானம் பாலசுப்பிரமணி அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.