×

அரசு மருத்துவமனைகளில் செவிலியர் வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பிங்க..!

 

திருநெல்வேலி சுகாதார மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தேசிய நலவாழ்வு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 104 செவிலியர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பட்டம் பெற்று, நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்துள்ள தகுதியான நபர்கள் மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வரும் செப்.25-ம் தேதி மாலை 5 மணிக்குள் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப படிவங்களை திருநெல்வேலி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், 16/22 பழைய போலீஸ் ஆஸ்பத்திரி தெரு, சமாதானபுரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி – 627 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் 25.09.2026 அன்று மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.