×

அரசு மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் கொரோனாவால் மரணம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள் என கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பலரை கொரோனா வைரஸ் பாதிக்கிறது. அவர்களுள் சிலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இந்த நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் எழிலரசி கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 40 வயதான எழிலரசிக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள் என கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பலரை கொரோனா வைரஸ் பாதிக்கிறது. அவர்களுள் சிலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இந்த நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் எழிலரசி கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 40 வயதான எழிலரசிக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளது. அவர் கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டதில், வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓரிரு நாட்களுக்கு முன்னர், அவரது உடல்நிலை மிக மோசமடைந்துள்ளது. அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எழிலரசியின் உடல் கொரோனா விதிக்கு உட்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.