×

15 வயது சிறுமியின் பிறப்புறுப்பில் எட்டி உதைத்த இன்ஸ்டா பிரபலம் கைது

 

சென்னை காசிமேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து 15 வயது சிறுமி மீது மோதிய இன்ஸ்டா பிரபலம் ‘காசிமேடு மீனவன்’ கவின் கைது செய்யப்பட்டார். வாக்குவாதம் செய்த சிறுமியின் வயிற்றில் எட்டி உதைத்ததோடு, சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்களையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காசிமேடு சிங்கார வேலன் நகர் பகுதியை சேர்ந்தவர் கவின். இவர் காசிமேடு மீனவன் என்ற வீடியோ மூலம் இன்ஸ்டாவில் பிரபலமாக உள்ளார். இவர் நேற்று  இரவு இருசக்கர வாகனத்தில், வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பொழுது சாலையில் நின்று கொண்டிருந்த 15 வயது சிறுமியின் மீது இருசக்கர வாகனத்தில் மோதி உள்ளார். உடனே அச்சிறுமி ஆத்திரமடைந்து வாக்குவாதம் செய்யவே, 15 வயது சிறுமி என்று கூட பாராமல் கவின் சிறுமியின் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். இதை தட்டி கேட்க வந்த சிறுமியின் தந்தையான நாகராஜையும் கவின் தாக்கிய நிலையில் சிறுமியின் உறவினர்களான பெண்கள் பலரும் சேர்ந்து கவினை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது தகவல் அறிந்து காசிமேடு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் பவித்ரன் சென்ற போது சிறுமியின் உறவினர்கள் கவினை நோக்கி எரிந்த கற்கள் காவலரின் மூக்கை பதம் பார்த்தது 

மூக்குத்தண்டு உடைந்து ரத்தம் ஒழுகிய நிலையிலும் கூட, சிறுமியின் உறவினர்களின் தாக்குதலில் இருந்து காவலர் பவித்ரன் கவினை பத்திரமாக காவல் நிலையம் அழைத்துச் சென்றார். கவினை தாக்கியதற்காக சிறுமையின் தந்தை நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 15 வயது சிறுமியை வயிற்றிலும் பிறப்புறுப்பிலும் எட்டி உதைத்தது மட்டுமல்லாமல் தட்டி கேட்க வந்த பெண்கள் மற்றும் சிறுமியின் உறவினரான மாற்றுத்திறனாளி பெண்ணை கவின் தாக்கியுள்ளார். இதனை அடுத்து கவீன் மீது போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர்.