இனி மாதம் ரூ.5000 கிடைக்கும்! புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களில் அதிரடி மாற்றம்..!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயர்வு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
திமுக ஆட்சி என்றால் இத்திட்டம் இதே பெயரில் தொடருவதுடன் மகளிர் உரிமைத்தொகை எப்போது முதல் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை அரசு கொடுக்கும். அதிமுக ஆட்சி என்றால் குல விளக்குத் திட்டம் என்ற பெயரில் மாதம் ரூ.2000 பெண்களுக்கு வழங்கப்படும். ஆனால், எப்போது முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாக மே மாத இறுதி அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும்.
இப்போது இத்திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய், 1.31 கோடி பெண்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.2000 கிடைக்க வாய்ப்பு. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற பிறகு அறிவிப்பார். இந்த இரண்டாயிரம் ரூபாய் தொகையுடன் ஒரு சில குடும்பங்களுக்கு கூடுதலாக மாதம் ரூ.3000 கிடைக்கும். ஆம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைப் போலவே புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்களுக்கும் மாதம் வழங்கப்படும் தொகை உயர்த்தப்பட உள்ளது.
இப்போது இந்த இரு திட்டங்களிலும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் தேர்தல் முடிவு வெளியான பிறகு திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த இரு திட்டங்களிலும் மாதம் வழங்கப்படும் தொகை 1500 ரூபாய் என உயர்த்தி வழங்கப்படும். இந்த அறிவிப்பும் ஜூன் மாதம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. அதன்படி பார்த்தால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வாங்கும் குடும்பங்களில் உயர்கல்வி படித்து தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களிலும் பயன் பெறும் பயனாளிகள் இருந்தால், அந்த குடும்பங்களுக்கு மாதம் 5000 ரூபாய் கிடைக்கும்.
இப்போது, இந்த மூன்று திட்டங்களில் பயனாளிகளாக இருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை மிக சொற்ப அளவிலேயே இருக்கின்றன. இருப்பினும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்தால், இந்த மூன்று திட்டங்களில் பயனாளியாகும் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். பொதுமக்கள் விழிப்பாக இருந்தால், குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் புதுமைப் பெண், தமிழ்புதல்வன் திட்டம் குறித்து அறிந்து விண்ணப்பித்தால், கலைஞர் மகளிர் உரிமைத்தொகையுடன் சேர்த்து இந்த மூன்று திட்டங்களிலும் பயன்பெற வாய்ப்பு இருக்கிறது.